முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மகளுக்கு ரூ.36,000... மகனுக்கு ரூ.30,000 கல்வி உதவித்தொகை...! மத்திய அரசு சூப்பர் திட்டம்

Rs.36,000 per annum for daughter...Rs.30,000 per year for son
06:55 AM Sep 24, 2024 IST | Vignesh
Advertisement

பிரதம மந்திரியின் கல்வி உதவி திட்டத்தின் (2024-25) கீழ் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. தகுதியானவர்கள் www.ksb.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2024-2025-ஆம் கல்வி ஆண்டில் 60% மதிப்பெண்களுக்கு மேல் 2 அல்லது இளங்கலை படிப்பில் பட்டம் பெற்று முதலாம் ஆண்டு பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், பி.டெக், பி.எஸ்.சி. நர்சிங், பி.எஸ்.சி. விவசாயம், கல்வியியல் (பி.எட்.,) படிப்பு மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சட்டம் மற்றும் பல தொழிற்கல்விகள் படிக்கும் சிறார்கள் பாரத பிரதம மந்திரியின் கல்வி உதவி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆகின்றார்கள். இந்நிதியுதவி தற்போது உயர்த்தப்பட்டு முன்னாள் படைவீரரின் மகளுக்கு வருடத்திற்கு ரூ.36,000/- வீதமும், மகனுக்கு ரூ.30,000/- வீதமும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் கல்விச் சலுகையினை அதிக அளவில் பயன் பெறும் பொருட்டு தற்போது கால அவகாசம் 30.11.2024 வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதால் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அல்லது சார்ந்தோர்கள் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு நேரில் வந்து உரிய அறிவுரையினை பெற்று www.ksb.gov.in என்ற இணைய தள முகவரியில் உரிய ஆவணங்களுடன் 30.11.20245 பதிவு செய்து பயன்பெறுமாறும், மேலும் அவ்வாறு பதிவு செய்த விவரத்தினை தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
central govtEx armyScholarshipstudents
Advertisement
Next Article