வாவ்...! வெளிநாட்டில் உயர் கல்வி பயில ரூ.36 லட்சம் உதவித்தொகை...! அரசு முக்கிய அறிவிப்பு...
2024-2025ஆம் ஆண்டிற்கான முதுநிலை, பிஎச்டி (Ph.D) மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பைத் (National Overseas Scholarship Scheme (NOS) வெளிநாடுகளில் கல்வி தொடரை தேர்ந்தெடுக்கும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இது குறித்து அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பில் 2024-2025ஆம் ஆண்டிற்கான முதுநிலை, பிஎச்டி (Ph.D) மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பைத் (National Overseas Scholarship Scheme (NOS) வெளிநாடுகளில் கல்வி தொடரை தேர்ந்தெடுக்கும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள பழங்குடியினர் மாணாக்கர்கள் கீழ்க்காணும் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
வெளிநாடுகளில் உயர் படிப்பைத் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.8.00 இலட்சம் இருப்பின் அதிகபட்சம் ரூ.36.00 இலட்சமும், குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.12.00 இலட்சம் இருப்பின் அதிக பட்சம் ரூ.24.00 இலட்சமும் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். மேற்படி தகவல் தெரிந்துகொள்ள https://overseas.tribal.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 31.05.2024. மேலும் விவரங்களுக்கு https://overseas.tribal.gov.in/ அமைச்சகத்தின் போர்ட்டலைப் பார்வையிடலாம்.