For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரூ.350 கேஸ் சிலிண்டர் மானியம்... 2025 மார்ச் வரை நீட்டிப்பு...! ஆன்லைன் மூலம் எப்படி பார்ப்பது...?

Rs.350 gas cylinder subsidy...extended till March 2025
06:41 AM Jun 14, 2024 IST | Vignesh
ரூ 350 கேஸ் சிலிண்டர் மானியம்    2025 மார்ச் வரை நீட்டிப்பு     ஆன்லைன் மூலம் எப்படி பார்ப்பது
Advertisement

உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத் தொகை கடந்த மாதம் உயர்த்தப்பட்டது (gas cylinder subsidy increased). அதிகாரப்பூர்வ தகவலின் படி, மார்ச் 2024 வரை மட்டுமே மானிய தொகை கிடைக்கும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது மார்ச் 2025 வரை இதன் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நாடு முழுவதும் 9 கோடிக்கும் அதிகமான மக்கள், மத்திய அரசின் சிறப்பு திட்டமான உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர்களை வாங்கி பயன்பெற்று வருகிறார்கள். பிரதான் மந்த்ரி உஜ்வலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana) திட்டத்தின் கீழ் இதற்கு முன்பு வரை ரூ.300 முதல் ரூ.200 வரை மானியம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த மானியத் தொகை தற்போது சிலருக்கு ரூ.350 ஆக கிடைக்கும் படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் வங்கி கணக்குகளுக்கு வழங்கப்படும் மாநில தொகையை எவ்வாறு கண்டறிவது என்பதை பார்க்கலாம்..?

ஆண்டுக்கு குடும்ப வருமானம் 10 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள் இந்த தொகை பெற தகுதியானவர்கள். உங்கள் வங்கி கணக்கில் பணம் வந்ததா என்பதை அறிய http://mylpg.in/ என்ற இணையதளத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட LPG ஐடியை பதிவிட்டு, சரிபார்க்கலாம். அல்லது ID தெரியவில்லை என்றால் உங்கள் மொபைல் எண்ணை பயன்படுத்தி ID யை தெரிந்து கொண்டு பின்னர் உங்களது மானியத் தொகை எவ்வளவு உள்ளது என்பதை சரி பார்த்துக்கொள்ளலாம். அல்லது சிலிண்டர் இணைப்புடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை (Mobile number) பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

Tags :
Advertisement