For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Candy Crush விளையாட்டில் ரூ.30 லட்சம் செலவழித்த பாதிரியார்…! அதுவும் தேவாலய நிதியாம்…!

04:11 PM May 03, 2024 IST | shyamala
candy crush விளையாட்டில் ரூ 30 லட்சம் செலவழித்த பாதிரியார்…  அதுவும் தேவாலய நிதியாம்…
Advertisement

தேவாலய நிதியை திருடி பாதிரியார் ஒருவர் கேண்டி க்ரஷ் விளையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் மொபைல் கேம்களில் அதிக நேரம் செலவிடுவதை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். கேண்டி க்ரஷ் என்ற மொபைல் விளையாட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விளையாடுகின்றனர்.  இந்நிலையில், லாரன்ஸ் கோசாக் என்ற புனித தாமஸ் மோர் தேவாலயத்தின் பாதிரியாராக இருந்து வந்தார். இவர், கேண்டி க்ரஷ் மற்றும் மரியோ கார்ட் போன்ற விளையாட்டுகளுக்கு அடிமையாகியுள்ளார்.

Advertisement

மொபல் விளையாட்டு விளையாடுவதற்காக தேவாலய நிதியில் இருந்து பாதிரியார் 33 லட்ச ரூபாய் பணத்தை திருடி மோசடியில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு தேவாலயத்தின் கிரெடிட் கார்டு மூலம் விளையாட்டிற்கான கட்டணங்களை பாதிரியார் செலுத்தியுள்ளார். இதனையறிந்த மற்ற பாதிரியார்கள் அவரை புனித தாமஸ் மோர் தேவாலயத்தின் கடமைகளில் இருந்து நீக்கினர்.

இது தொடர்பாக, போலீசார் பாதிரியாரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், பாதிரியார் தேவாலய காணிக்கை நிதியில் இருந்து சுமார் 33 லட்ச ரூபாய் விளையாட்டிற்காக திருடியது தெரியவந்துள்ளது. கடந்த மாதம் 25ம் தேதி தேவாலயத்தின் நிதியிலிருந்து பாதிரியார் பணத்தை திருடியதை போலீசார் உறுதி செய்து அவரை கைது செய்தனர். விசாரணையில் பாதிரியார் மொபைல் கேம்களுக்கு அடிமையாகி இருப்பதாகவும், இதற்காக மருத்துவ உதவியை நாடுவதாகவும் கூறினார்.

பாதிரியார் விளையாட்டிற்கு அடிமையாகி லட்ச ரூபாயை மோசடி செய்த சம்பவம் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிரடி தடை!! “ஆன்லைன் சூதாட்டம் பற்றி விளம்பரப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்” – தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

Tags :
Advertisement