தொடக்கக் வேளாண் கடன் சங்கங்களை டிஜிட்டல் மயமாக்க ரூ.2,516 நிதி ஒதுக்கீடு...!
தொடக்க வேளாண் கடன் சங்கங்களை டிஜிட்டல் மயமாக்க ரூ.2,516 நிதி ஒதுக்கீடு.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா; 2024 மார்ச் 31 நிலவரப்படி தொடக்க வேளாண் கடன் சங்கங்களின் (PACS) டிஜிட்டல் மயமாக்கலுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள்: தொடக்கக் வேளாண் கடன் சங்கங்களை வலுப்படுத்தும் வகையில், ரூ.2,516 கோடி நிதி ஒதுக்கீட்டில், செயல்பாட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை கணினிமயமாக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, நாட்டில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும் ஒரு பொதுவான நிறுவன வள திட்டமிடல் (நிறுவன வள திட்டமிடல்) அடிப்படையிலான தேசிய மென்பொருளின் கீழ் கொண்டு வந்து, அவை மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் நபார்டு வங்கியுடன் இணைக்கப்படுறது. இத்திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.2,516 கோடி ஆகும். இதில் மத்திய அரசு, மாநில அரசுகள், நபார்டு வங்கியின் பங்கு முறையே ரூ.1528 கோடி, ரூ.736 கோடி, ரூ.252 கோடி ஆகும் என தெரிவித்துள்ளார்.