மகிழ்ச்சி செய்தி...! ஆசிரியர்களுக்கு 2,500 ரூபாய் ஊதிய உயர்வு...! இந்த மாதத்தில் இருந்தே நடைமுறை வரும்...!
பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2,500 ரூபாய் ஊதியம் உயர்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 12,500 ரூபாயாக உயர்த்தியது தமிழக அரசு. நடப்பு மாதத்தில் இருந்து ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட (16,549) பல்வேறு சிறப்பு ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருவது தெரிந்ததே. இவர்களின் தற்போது பணியில் இருப்பவர்கள் 10,359 ஆசிரியர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு தற்போது 10,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.
இவர்களின் முந்தைய கோரிக்கையான ஓய்வு பெறும் வயதினை 60 ஆக்குவது மற்றும் அவர்களுக்கு விரும்பிய மாவட்டத்திற்கு மாறுதல் அளிப்பது என்பதை அரசு ஏற்று ஏற்கனவே நடைமுறைப்படுத்தி உள்ளது. தற்போது நிதி நெருக்கடி இருந்தாலும் இவ்வாசிரியர்களுக்கு மாத ஊதியத்தினை 12,500 ரூபாயாக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி, மாநிலத் 4 திட்ட இயக்குநரின் கருத்துருவினை அரசு நன்கு பரிசீலித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் பணிபுரியும் 12,105 பகுதி நேரப் பயிற்றுநர்களுக்கு மாதம் ஒன்றிற்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தினை ரூ.10,000/- லிருந்து ரூ.12,500/- ஆக உயர்த்தியும் அவ்வாறு உயர்த்துவதால் ஒவ்வொரு ஆண்டும் 11 மாதங்களுக்கு தொடர் செலவினமாக ரூ.33,28,87,500 நிருவாக ஒப்புதல் அளித்தும், நடப்பு நிதியாண்டில் மீதமுள்ள மூன்று மாதத்திற்கு ஜனவரி 2024 முதல் மார்ச் 2024 முடிய மட்டும் ரூ.9,07,87,500/ (ரூபாய் ஒன்பது கோடியே ஏழு இலட்சத்து எண்பத்து ஏழாயிரத்து ஐந்நூறு மட்டும்) நிதி ஒதுக்கீடு செய்தும் அரசு ஆணையிடுகிறது.