முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மீண்டும் ரூ.2000 நோட்டுகள் செல்லும்!… ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

08:23 AM Jan 02, 2024 IST | 1newsnationuser3
Advertisement

ரூ.2000 நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடியாகும் எனவும், இதுவரை 97.38 சதவீத நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

கடந்த 2016ம் ஆண்டு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டன. அவற்றுக்குப் பதில் புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதையடுத்தும் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என ஏற்கனவே ரிசர்வ் அறிவித்திருந்தது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகும் ரூ.2000 நோட்டை மாற்ற முடியாதவர்கள், அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ரூ.20,000 வரை ரூ.2000 நோட்டை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த 19 கிளைகளில் தனிநபரோ, நிறுவனமோ ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

இது குறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 2023ம் ஆண்டு மே 19ம் தேதி, ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. டிச.,29ம் தேதி, ரூ.9,330 கோடி மட்டுமே புழக்கத்தில் இருந்தது. அதாவது, 97.38 சதவீத நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ரூ.2,000 நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் 9 ஆயிரத்து 330 கோடி ரூபாய் மதிப்புடைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டும் மீதமுள்ளன” எனவும் 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடி ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
97.38%rbi announcementRs.2000 notesரிசர்வ் வங்கிரூ.2000 நோட்டுகள் செல்லும்
Advertisement
Next Article