ரூ.2,000 நோட்டு செல்லாதா..? அதெல்லாம் பொய்..!! செல்லுமாம்..!! ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..!!
2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்ததாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. எவ்வாறாயினும், இந்த நோட்டுகள் சட்டப்பூர்வமாக செல்லும் என்று மத்திய வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது எந்த வங்கிக் கிளையிலும் மற்ற ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இதற்கான கால அவகாசமும் கொடுக்கப்பட்டது.
கடந்த மே மாதம் ரூ.2,000 நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்ததை அடுத்து தற்போது வரை 97 சதவீத நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. ஆனால், அவை செல்லாதவை ஆகாது என்று ரிசர்வ் வங்கி மீண்டும் தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள போஸ்ட் ஆபீஸ்கள் மற்றும் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.