முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பொங்கல் பண்டிகைக்கு ரூ.2,000 வரப்போகுது..!! அமைச்சர் சொன்ன செம குட் நியூஸ்..!!

04:33 PM Nov 29, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று பொங்கல் பண்டிகை. இது தமிழ் மாதத்தில் தை முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை மக்கள் கொண்டாடும் வகையில் அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலமாக ஆண்டுதோறும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

அதில், பொங்கலுக்கு தேவையான பொருட்களுடன் சேர்ந்து வேஷ்டி, சேலை மற்றும் ரொக்கம் ஆகியவை வழங்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், "மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் வழங்கப்படாமல் இருப்பதால் அது குறித்த அதிருப்தி நிலவி வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000-க்கு பதிலாக ரூ.2000 வழங்கலாமா என அரசு பரிசீலித்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
அமைச்சர் பெரியகருப்பன்கூட்டுறவுத்துறைபொங்கல் பண்டிகை
Advertisement
Next Article