முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பொங்கல் பண்டிகைக்கு ரூ.2,000 பணமா..? வேட்டி-சேலையும் உண்டு..!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம குட் நியூஸ்..!!

The news that all ration card holders will be given Rs. 2,000 in cash and free dhoti and sarees on the occasion of Pongal festival has brought joy.
11:57 AM Nov 28, 2024 IST | Chella
Advertisement

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 ரொக்கம் மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், அடுத்தாக பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழர்களின் சிறப்பை போற்றும் வகையிலும், அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு அளிக்கும் விவசாயிகளுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் பொங்கல் திருநாள் அனைத்து தரப்பு மக்களாலும் தை மாதம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்புக்கு இப்போதே மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த முறை பொங்கல் பண்டிகையின்போது பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகையான ரூ.1,000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1,000 அத்துடன் கருப்பு உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும் என பெண்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை இன்னும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ.1,0000 ரொக்கமும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதிலாக ரூ.2,000 ரொக்கம் மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Read More : வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில்..!! EX டிஐஜி வீட்டில் நடந்த பயங்கரம்..!! கோயம்பேட்டில் அதிர்ச்சி..!!

Tags :
தமிழ்நாடு அரசுபணம்பொங்கல் திருநாள்பொங்கல் பண்டிகைபொங்கல் பரிசுத் தொகுப்புவேட்டி சேலை
Advertisement
Next Article