முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மகிழ்ச்சி...! கரும்பு விவசாயிகளுக்கு ரூ.12,500 மானியம்... 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...!

Rs.12,500 subsidy for sugarcane farmers...can apply till 30th
06:15 AM Jun 21, 2024 IST | Vignesh
Advertisement

கரும்பு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.. 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டு என்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2023-24 ஆம் ஆண்டு அரவை பருவத்தில் 137778 மெ.டன் கரும்பு அரவை செய்யப்பட்டு 10.10% சர்க்கரை கட்டுமானம் அடைந்துள்ளது. சர்க்கரை கட்டுமானத்தில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் 2023-24 நடவு பருவத்திற்கு இது வரை சுமார் 3000 ஏக்கர் கரும்பு ஆலை அரவைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பதிவு செய்துள்ள கரும்பிற்கு சர்க்கரை கட்டுமானம் 10.10% அடிப்படையில் ஆலை மெ.டன் ஒன்றிற்கு ரூ.3350/- மற்றும் தமிழ் நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகை மெ.டன் ஒன்றிற்கு ரூ.215/-, ஆக மொத்தம் கரும்பு மெ.டன் ஒன்றிற்கு ரூ.3,565 கிடைக்க உள்ளது. மேலும் கரும்பு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மானிய விலையில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் பருசீவல் நாற்று கொண்டு நடவு செய்யும் விவசாய அங்கத்தினர்களுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.12,500, ஒரு பரு கரணை கொண்டு நடவு செய்யும் விவசாய அங்கத்தினர்களுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.3750/-, திசு வளர்ப்பு நாற்றுக்கு, நாற்று ஒன்றுக்கு ரூ.6/- மானியமாக வழங்கப்படுகிறது., இதுவரை ஆலைக்கு பதிவு செய்யாத அங்கத்தினர்கள் அனைவரும் வரும் 30.06.2024 அன்றுக்குள் பதிவு செய்து, ஆலை நல்ல முறையில் இயங்க ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தி உள்ளார்.

Tags :
dharmapuri dtsubcidysugarcanetn government
Advertisement
Next Article