முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஒரு மணி நேரத்திற்கு ரூ.12,500..!! இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை..!!

05:43 PM Nov 18, 2023 IST | 1newsnationuser6
Advertisement

நியூயார்க் நகரம் என்பது எப்போதும் பிசியாக இருக்கக்கூட சிட்டி. ஆனாலும், இங்கு பல பேர் தனிமையில் தங்களது வீடுகளை விட்டு கரியர், பிஸினஸ் என ஓடிக்கொண்டே இருக்கின்றனர். இதில் பல இளம் தலைமுறையினர் சக மனிதர்கள் உடனான இணைப்பை அதிகம் தேடி வருகின்றனர். இதனால் இந்த நகரத்தில் டச் தெரபி, கட்டிப்பிடி வைத்தியம் என்பதும் cuddling சேவைகளுக்கு மிகப்பெரிய அளவிலான டிமாண்ட் உருவாகியுள்ளது.

Advertisement

ஓவிய ஆசிரியராக இருந்த ELLA என்பவர் இளம் தலைமுறையினர் மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் உருவான தனிமையை கவனித்து முழுநேர தொடு சிகிச்சை நிபுணராக மாறினார். பொதுவாக கட்டிப்பிடிப்பது என்றாலே தவறான தொழிலாக பலர் பார்க்கின்றனர். ஆனால், இது தனிமையில் இருந்து மீட்டெடுக்கும் ஒரு நிவாரணமாக மாறியுள்ளது.

இந்நிலையில், ELLA என்ற அந்த பெண் தொடு சிகிச்சை பெறுவோருக்கு கைகளை பிடித்துக்கொள்ளவும், தங்கள் மனதில் இருப்பதை பகிரவும், ஆறுதலான அரவணைப்பையும் வழங்குகிறார். அதற்காக ஒரு மணிநேரத்திற்கு சுமார் 150 டாலர் தொகையை கட்டணமாக வசூலித்து வருகிறார். இது இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 12,500 ரூபாய் ஆகும். இவருடைய சேவையை பெறுவோர் துவக்கத்தில் 40 முதல் 60 வயதான திருமணமான ஆண்கள் மட்டுமே இருந்த நிலையில், சமீபத்தில் இளம் தலைமுறை பெண்களும் பலர் இங்கு வந்து ஆதரவு தேடுவதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பெண் 2017ஆம் ஆண்டில் தனது பணியை ராஜினாமா செய்து விட்டு இந்த தொடு சிகிச்சை மற்றும் கட்டிப்பிடி வைத்தியத்தை செய்து வருகிறார். இதற்காக Cuddlist's certificate-ஐ பெற்றுள்ளதாக கூறுகிறார்.

Tags :
கட்டிப்பிடி வைத்தியம்நியூயார்க்
Advertisement
Next Article