For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மத்திய அரசின் சூப்பர் திட்டம்...! தனிநபர் இல்லத்தில் கழிப்பறை கட்ட ரூ.12,000 ஊக்கத்தொகை...!

09:16 AM Feb 14, 2024 IST | 1newsnationuser2
மத்திய அரசின் சூப்பர் திட்டம்     தனிநபர் இல்லத்தில் கழிப்பறை கட்ட ரூ 12 000  ஊக்கத்தொகை
Advertisement

அனைத்து ஊரக வீடுகளுக்கும் கழிப்பறை வசதியை வழங்குவதன் மூலம், நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை 2019 அக்டோபர் 2-ம் தேதிக்குள் அடையும் நோக்கத்துடன் தூய்மை இந்தியா இயக்கம் அக்டோபர் 2, 2014 அன்று தொடங்கப்பட்டது.

Advertisement

தூய்மை இந்தியா இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ், வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாத வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், கண்டறியப்பட்ட வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள குடும்பங்களுக்கும் (ஆதிதிராவிடர் / பழங்குடியினர் குடும்பங்கள், உடல் ஊனமுற்றோர் உள்ள குடும்பங்கள், வீட்டுமனை கொண்ட நிலமற்ற தொழிலாளர்கள், சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் பெண்கள் தலைமையிலான குடும்பங்கள்) தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டுவதற்கு ஊக்கத்தொகை ரூ.12,000 வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புறம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்) அக்டோபர் 2, 2014 அன்று நாட்டின் நகர்ப்புறங்களை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதிகளாக மாற்றவும், நாட்டின் நகர்ப்புறங்களில் உருவாகும் நகராட்சி திடக்கழிவுகளை விஞ்ஞான முறையில் பதப்படுத்தவும் தொடங்கப்பட்டது. முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்ல, இத்திட்டத்தின் 2-ம் கட்டம் அக்டோபர் 1, 2021 அன்று ஐந்து ஆண்டு காலத்திற்கு தொடங்கப்பட்டது. செயல்பாட்டு வழிகாட்டுதல்களின்படி தூய்மை பாரத இயக்கம்- 2.0 இன் கீழ் பயனாளி குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

Tags :
Advertisement