உலகின் மிக விலையுயர்ந்த தேர்தல் இதுதான்!… ரூ.120 கோடி செலவு!… ஃபர்ஸ்ட் போஸ்ட் தகவல்!
Most Expensive Eelection: சுமார் 120 லட்சம் கோடி ரூபாய் செலவில் நடத்தப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ள நடப்பாண்டு மக்களவைத் தேர்தலே உலகின் மிக விலையுயர்ந்த தேர்தல் என்று ஃபர்ஸ்ட் போஸ்ட் தகவல் தெரிவித்துள்ளது.
2024 மக்களவை தேர்தல் இன்று காலை 7மணிக்கு தொடங்குகிறது. முதல் கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நடைமுறைக்கு களம் அமைக்கப்பட்டுள்ளது. 543 மக்களவைத் தொகுதிகளில், 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு முதல் கட்ட பொதுத் தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது . இரு வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்துக்கும் ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.
காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடையும் வாக்குப்பதிவுக்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது. 1.87 லட்சம் வாக்குச் சாவடிகளில் 18 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடி பணியாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது, அங்கு 16.63 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவார்கள். முதற்கட்டமாக 8.4 கோடி ஆண் வாக்காளர்களும், 8.23 கோடி பெண் வாக்காளர்களும், 11,371 மூன்றாம் பாலின வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், மக்கள் யாருக்கு வாக்களித்தாலும், அவர்களின் விரல்களில் ஊதா நிற மை வைக்குப்படும். இந்த மை சில்வர் நைட்ரேட் மை. இது விரலில் அழிக்க முடியாத தடையத்தை ஏற்படுத்த கூடியவை, இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை இந்த மை நீடிக்கும். இந்த மை அழிப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்பதால் வாக்காளர் மோசடி மற்றும் போலி வாக்குகளை இதை தடுக்கிறது. 1937 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த மை மைசூரில் உள்ள ஒரு சிறிய தொழிற்சாலையை உருவாக்கப்படுகிறது. மைசூர் பெயின்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட் இந்த தேர்தலுக்காக 2.7 மில்லியன் பாட்டில்கள் மை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது.
கர்நாடக அரசு நிறுவனமான மைசூர் பெயின்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட் 1962 ஆம் ஆண்டு முதல் தேர்தல் ஆணையத்திற்காக மட்டுமே மை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் மை தான் ஒருவர் வாக்களித்ததற்கான சான்றாக இடது கை ஆள்காட்டி விரலில் தடவப்படும் மை. இந்த நிறுவனம் வழக்கமாக தனது வர்த்தகம், உற்பத்தியை செய்தாலும், தேர்தல் நடக்கும் காலத்தில் கூடுதல் பிசியாக இருக்கும். ஒவ்வொரு மாநில தேர்தலுக்கும் இந்த தொழிற்சாலையில் இருந்து மை டப்பாக்கள் செல்ல உள்ளது. அதுவும் தற்போது பொது தேர்தல் என்பதால் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 7 மில்லியன் டாலருக்கும் அதிகம் சம்பாதிதுள்ளது என கணிக்கப்பட்டு உள்ளது.
இதுமட்டுமல்லாமல், இந்த வருடத்திற்கான பொது தேர்தல் சுமார் 120 லட்சம் கோடி ரூபாய் செலவில் நடத்தப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 14 பில்லியன் டாலக் செலவில் நடத்தப்படுகிறது என ஃபர்ஸ்ட் போஸ்ட் தெரிவித்துள்ளது. இதன் மூலம் உலகின் மிக விலையுயர்ந்த தேர்தலாக உள்ளது.
Readmore:DMK: விதியை மீறி அமைச்சருக்கு ஆதரவாக செயல்பட்ட PRO…! தேர்தல் ஆணையம் அதிரடி…!