For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10,000 + விருது...! தமிழக அரசு அறிவிப்பு...! முழு விவரம்

Rs.10,000 + Award for Best Athletes
08:35 AM Nov 08, 2024 IST | Vignesh
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ 10 000   விருது     தமிழக அரசு அறிவிப்பு     முழு விவரம்
Advertisement

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது" பெற சிறந்த விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விளையாட்டு வீரர்கள். 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர். உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ரூ.1.00 இலட்சம் வீதம், ரூ.10,000/- மதிப்பிலான தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுப்பத்திரம் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை வழங்கி ஒவ்வொரு ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டிலும் வழங்கி வருகிறது. விருது ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள் விளையாட்டில் சாதனைகள் படைத்த விவரங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

இதுதவிர, விளையாட்டுப்போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர், ஒரு நிர்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ரூ.10.00 இட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்த ஒரு நன்கொடையாளர், ஒரு ஆட்ட நடுவர். நடுவர். நீதிபதி ஆகியோர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது ஒவ்வொரு ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டிலும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மேற்கண்ட விருதிற்கு ரூ.10,000/-க்கு மிகாமல் ஒரு தங்கப்பதக்கமும், ஒரு பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு விருது வழங்குவதற்கு முந்தைய இரண்டு வருட செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின்படி, 2022-2023க்கு 01.04.2019 முதல் 31.03.2022 வரையிலான காலமும், 2023-20245 01.04.2020 முதல் 31.03.2023 வரையிலான காலமும் எடுத்துக்கொள்ளப்படும். முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள்,வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர். விளையாட்டுப் போட்டிகளை நடத்துநர். ஒரு நிர்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர். ஒரு ஆட்ட நடுவர். நடுவர். நீதிபதி ஆகியோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இவ்விருதிற்கு தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழ்நாட்டிற்காக இரண்டு முறை தமிழ்நாடு அணியின் சார்பாக கலந்து கொண்டு இந்தியாவின் சார்பாக விளையாடியவர்கள் தகுதி பெறுவர். இந்தியாவின் சார்பாக கலந்து கொண்ட தமிழ்நாட்டில் பணியின் நிமித்தம் குறைந்தது 5 ஆண்டுகளாக வசித்து வரும் முப்படை, ரயில்வே, காவல், அஞ்சல் மற்றும் தொலை தொடர்புத்துறை மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர். இரண்டாவது முறையாக ஒரு நபருக்கு இவ்விருது வழங்கப்பட மாட்டாது.

விருதுக்கான விண்ணப்பங்கள் மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து சாதனைகள் படைத்த தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுக்களில் பதக்கமும் அதாவது உலகக்கோப்பை, தெற்காசிய விளையாட்டு போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட விளையாட்டு நடத்தப்படும் தேசிய விளையாட்டுப்போட்டிகள் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனிநபர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களிலும் மற்றும் குழுப்போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடமும் பெற்றிருத்தல் வேண்டும். போட்டிகளில் பெற்ற வெற்றிகள் கருத்தில் கொள்ளப்படும்.

2022-2023 மற்றும் 2023-2024 ஆகிய முந்தைய மூன்று ஆண்டுகளான 01.04.2020 முதல் 31.03.2023 முடிய பெற்ற வெற்றிகள் கருத்தில் கொள்ளப்படும். தனிநபர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களிலும் மற்றும் குழுப்போட்டிகளில் முதல் மற்றும் இடமும் பெற்றிருத்தல் வேண்டும். தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளின் சாதனைகள் கருத்தில் கொள்ளப்படும். முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பப் படிவத்தினை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 74017 03488 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் "முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்" என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உறுப்பினர் செயலர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை 600 003 என்ற முகவரிக்கு 15.11.2024-க்குள் வந்து சேரும் வகையில் அனுப்பி வைத்திட வேண்டும்.

Tags :
Advertisement