முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாதம் ரூ.1,000 உதவித்தொகை... இந்த மாதம் வழங்குவதில் காலதாமதம்...! என்ன காரணம்...?

06:16 AM Apr 01, 2024 IST | Vignesh
Advertisement

தேசிய திறனறி தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 ஏப்ரல் 8-ம் தேதி வழங்கப்படும்.

தேசிய திறனறி தகுதித் தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. 8ம் வகுப்பில் இந்தத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 9-12ஆம் வகுப்பு வரை மொத்தம் ரூ.48000 வழங்கப்படும். மாதந்தோறும் 7ஆம் தேதி மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

Advertisement

இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 9 மற்றும் 11ம் வகுப்பு பயின்று வரும் 3093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும், 8 மற்றும் 10ஆம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனவும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித்தொகையானது வழங்கப்படும்.

இந்த மாதத்திற்கான பணம் வரவு வைக்கப்படுவதில் காலதாமதம் ஆகும். காரணம் ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் அடுத்த நாளான திங்கட்கிழமை இந்த பணம் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Next Article