மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000..!! பிரதமர் முன்னிலையில் மாஸ் காட்டிய முதல்வர் முக.ஸ்டாலின்..!!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தொட்ட துறை அனைத்திலும் சிகரத்தை தொட்ட மாநிலம் தமிழ்நாடு என புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 29 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது என்று சூளுரைத்தார். இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு என்றும் கூறினார்.
இதற்கிடையே, மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். சென்னை-பினாங், சென்னை-டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என்றும் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கை விரைந்து வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.