For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரூ.1,000 பணம் வந்தாச்சு..!! பெண்களே வங்கிக் கணக்கை உடனே செக் பண்ணுங்க..!!

1,000 has been credited to the user's bank account for this month's Artist Women's Entitlement.
11:40 AM Jun 15, 2024 IST | Chella
ரூ 1 000 பணம் வந்தாச்சு     பெண்களே வங்கிக் கணக்கை உடனே செக் பண்ணுங்க
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 27.3.2023 அன்று, சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உரிமைத் தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.

Advertisement

இதற்கிடையே, மக்களவைத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளதாக உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. ஏனென்றால், ரேஷன் அட்டை இருந்தால் தான் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும். எனவே, அந்தப் பணியும் தொடங்கியுள்ளதால், விரைவில் உரிமைத்தொகைக்கு ஏராளமான பெண்கள் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இம்மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான ரூ.1,000 பயனர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி இத்திட்டத்திற்கான ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை 9 தவணைகள் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், 10-வது தவணை இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது.

Read More : அரிய வகை நோயால் நரக வேதனையை அனுபவிக்கும் தமிழ் நடிகை..!! உடலில் இப்படி ஒரு பிரச்சனையா..?

Tags :
Advertisement