முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

என்னது ஆண்களுக்கும் ரூ.1,000 உரிமைத்தொகையா..? வங்கியின் குறுஞ்செய்தியால் அதிர்ந்துபோன வாடிக்கையாளர்..!!

03:00 PM Nov 13, 2023 IST | 1newsnationuser6
Advertisement

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த மருத்துவர் புண்ணியகோடிக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வரவு வைக்கப்பட்டதாக வங்கியில் இருந்து குறுஞ்செய்தி வந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

Advertisement

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்.15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்கு1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக மேல்முறையீடு செய்த மகளிருக்கும் இந்த மாதம் முதல் உரிமைத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வாடிக்கையாளராக உள்ள வில்லிவாக்கத்தை சேர்ந்த மருத்துவர் புண்ணியகோடி வங்கியில் இருந்து தனது செல்போன் எண்ணிற்கு வந்த குறுஞ்செய்தியை கண்டு அதிர்ந்து போனார். அதாவது, இவரது வங்கிக் கணக்கில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக வங்கியில் இருந்து மெசேஜ் வந்துள்ளது.

தொடர்ந்து மருத்துவர் புண்ணியகோடி, தனது வங்கி கணக்கை சோதனை செய்தபோது பணம் எதுவும் வரவு வைக்கப்படவில்லை என தெரியவந்தது. தொடர்ந்து மதியம் 1 மணி அளவில், உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தி தவறானது எனவும், சிரமத்திற்கு வருந்துவதாகவும் மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வந்ததாக தெரிகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் ரூ.9,000 கோடி வரவு வைக்கப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மெர்க்கன்டைல் வங்கி தரப்பில் மற்றொரு சம்பவம் நடந்திருக்கிறது. இதுபோன்ற தொடர் சம்பவங்களால் வங்கி பாதுகாப்பில் ஏதேனும் குளறுபடி ஏற்பட்டுள்ளதா? என பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

Tags :
சென்னைமகளிர் உரிமைத்தொகைமருத்துவர்வில்லிவாக்கம்
Advertisement
Next Article