For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வந்தாச்சு...! அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம்...! தமிழக அரசு அரசாணை வெளியீடு

05:30 AM Jan 10, 2024 IST | 1newsnationuser2
வந்தாச்சு     அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ 1 000 ரொக்கம்     தமிழக அரசு அரசாணை வெளியீடு
Advertisement

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2023 அக்டோபர் 31-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் என 2 கோடியே 19 லட்சத்து 57,402 பேருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்க ரூ.238 கோடியே 92 லட்சத்து 72,741 நிதி ஒதுக்கி நிர்வாக ஒப்புதல் வழங்கி ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதில் பச்சரிசியை பொருத்தவரை, ஒரு கிலோ ரூ.35.20 என்ற விலையில், 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.77.29 கோடி செலவினமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, ஒருகிலோ சர்க்கரை ரூ.40.61-க்கு கொள்முதல் செய்ய ரூ.89.18 கோடி, போக்குவரத்து செலவினம், வெட்டுக்கூலி உட்பட முழு கரும்புக்கு ரூ.33 வீதம் ரூ.72.46 கோடி என மொத்தம் ரூ.238 கோடியே 92 லட்சத்து 72 ஆயிரத்து 741 ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் பச்சரிசி கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையத்திடம் இருந்து சர்க்கரை கொள்முதல் செய்யப்படும். கடந்த ஆண்டு அக்டோபர் மாத விலையில் கொள்முதல் செய்து வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement