கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சமா..? வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..!! வைரலாகும் வீடியோ..!!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 18 மற்றும் 19ஆம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் உடல் நிலை பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நேற்று வரை மொத்தம் 211 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 4 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 105 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 30 பேர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 17 பேர் என 157 பேர் சிகிச்சையில் உள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் 8 பேருக்கு வெண்டிலேட்டரில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், இதனை சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் விமர்சித்தனர். குடித்து இறந்தவர்களுக்கு எதற்கு ரூ.10 லட்சம் என்று பொதுமக்களும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், நிவாரணத் தொகை குறித்து சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்தும், ரீல்ஸ் பதிவிட்டு வருகின்றனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read More : 12-வது குழந்தைக்கு தந்தையானார் உலக பணக்காரர் எலான் மஸ்க்..!! குவியும் வாழ்த்து..!! ஆனால், ஒரு ட்விஸ்ட்..!!