செம வாய்ப்பு... RBI வழங்கும் ரூ.10 லட்சம்... யாரெல்லாம் இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்...! முழு விவரம்
வினாடி வினா போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் முதல் பரிசாக வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் 90 ஆண்டுகால செயல்பாடுகளைக் குறிக்கும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கல்லூரி இளங்கலை மாணவர்களுக்கான வினாடி வினா போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் கவர்னர் சக்திகாந்த தாஸ் RBI90Quiz க்கான ஆன்லைன் தளத்தை ஆகஸ்ட் 20 அன்று வெளியிட்டார். இந்த போட்டி மாணவர்களிடையே ரிசர்வ் வங்கி மற்றும் நிதி சூழல் அமைப்பு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் என்று தாஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
RBI90Quiz என்பது பல-நிலைப் போட்டியாகும், இது ஒரு ஆன்லைன் கட்டத்தில் தொடங்கி, தேசிய இறுதிப் போட்டியில் முடிவதற்கு முன்பு மாநில மற்றும் மண்டலச் சுற்றுகள் மூலம் முன்னேறும். வினாடி வினா பொது அறிவில் கவனம் செலுத்துகிறது, நிதி கல்வியறிவு மற்றும் விழிப்புணர்வை வலியுறுத்துகிறது.
போட்டியில் பல்வேறு நிலைகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்:
தேசிய அளவில் முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.8 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.6 லட்சமும் வழங்கப்படும். மண்டல அளவில் முதல் பரிசாக ரூ.5 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.4 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படும். மாநில அளவில் முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்படுகிறது. RBI90Quiz க்கான பதிவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.rbi90quiz.in/ மூலம் பதிவு செய்யலாம். வினாடி வினா போட்டியில் பங்கேற்பதற்கான கட்டணம் இல்லை.