முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரூ.10 நாணயம் செல்லும்..!! வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை..!! ஆட்சியர் அதிரடி..!!

06:01 PM Nov 06, 2023 IST | 1newsnationuser6
Advertisement

இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் இந்திய தண்டனைச் சட்டம் 124 கீழ் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என ராமநாதபுரம் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் இருந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என பல கிராமங்களில் மக்கள் மற்றும் சிறு கடைகளில் வாங்க மறுப்பு தெரிவிக்கின்றனர்.

இந்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும். இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள 14 வகையான 10 ரூபாய் நாணயங்கள் செல்லத்தக்கது. ஆகையால், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதும் தண்டனைக்குரிய குற்றம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
3 ஆண்டுகள் சிறை தண்டனைஇந்திய அரசுராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்ரூ.10 நாணயம்
Advertisement
Next Article