Tn Govt: ரூ.1 லட்சம் மானியம்... பழங்குடி பெண்களுக்கு தமிழக அரசு கொண்டு வந்த அசத்தல் திட்டம்...!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 50 உறுப்பினர்களைக் கொண்ட மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க சேலம் மாவட்டத்திற்கு ஒரு ஆதிதிராவிடர் மகளிர் மற்றும் ஒரு பழங்குடியின மகளிருக்கு தலா ரூ.1 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பில், ஆதிதிராவிடர்களுக்கும், பழங்குடியினருக்கும் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 50 உறுப்பினர்களைக் கொண்ட மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் அமைத்திட ஆணையிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன் பெற ஆதிதிராவிடர் பயனாளிகள் https://application.tahdco.com என்ற இணையதளத்திலும், பழங்குடியினர் பயனாளிகள் https://fast.tahdco.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன்பெறலாம்.