”ஆண்ட பரம்பரை”..!! ”அப்போது படிப்பறிவு இல்லாததால் நமது வரலாறுகள் வெளியே தெரியவில்லை”..!! அமைச்சர் மூர்த்தி சர்ச்சை பேச்சு..!!
தமிழ்நாட்டு முழுவதும் ஜனவரி 1ஆம் தேதி 2025 புத்தாண்டு கொண்டாட்டங்கள் விமரிசையாக நடத்தப்பட்டன. அந்த வகையில், மதுரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பேசிய கருத்துக்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், குறிப்பிட்ட சமுதாய மக்களை உயர்த்தி கூறும் வகையில், சில சர்ச்சையான கருத்துக்களை பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், ”இது ஆண்ட பரம்பரை என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பல வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இப்போது படித்திருக்கிறீர்கள். மற்ற சமூகத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் உயிரிழந்தனர் என்பதை பெரிதாக பேசுகிறார்கள். ஆனால், சுதந்திரத்திற்காக 5,000 முதல் 10,000 பேர் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளார்கள். வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும்.
ஆங்கிலேயர்கள் கோயில் சொத்துக்களை கொள்ளையடித்து செல்வதை தடுக்க இந்த சமுதாயத்தில் 5,000 பேர் உயிரிழந்துள்ளனர். நமது சமுதாயத்தில் போதிய படிப்பறிவு அப்போது இல்லாததால் நமது வரலாறுகள் வெளியே தெரியவில்லை. தற்போது பலரும் படித்து அரசு வேலையில் சேர்ந்து கொண்டிருப்பதை நான் பாராட்டுகிறேன்" என்று பேசினார்.
அமைச்சர் மூர்த்தி அவர் சார்ந்த சமுதாயம் பற்றி பேசினாரோ? அல்லது வேறு சமுதாயத்தை பற்றி பேசினாரா? எப்படி இருந்தாலும் குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்தி மற்ற சமூகத்தை விமர்சித்து பேசுவது என்பது கண்டனத்திற்குரியது என பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Read More : தவெக-வின் 2-வது மாநாட்டில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய்..? என்ன செய்யப்போகிறார் தெரியுமா..?