கள்ளக்காதலி வீட்டில் ரவுடி..!! வீடு புகுந்து வெட்டி சாய்த்த கும்பல்..!! சென்னையில் பரபரப்பு சம்பவம்..!!
காசிமேடு பகுதியில் கள்ளக்காதலியுடன் இருந்த ரவுடியை வீடு புகுந்து வெட்டி சாய்த்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை காசிமேடு மூன்றாவது தெரு பகுதியில் வசித்து வருபவர் லோகநாதன் (33). இவர், மீது ஏற்கனவே காசிமேடு மீன் பிடித்து துறைமுக காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், வீட்டில் லோகநாதன், அவரது கள்ளக்காதலி மாலதி (48) ஆகியோர் தனியாக இருந்துள்ளனர்.
அப்போது, திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், லோகநாதனை சரமாரியாக வெட்டி சாய்த்தது. மேலும், அங்கிருந்த கள்ளக்காதலி மாலதிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் அவர், நிலை குலைந்து கீழே விழுந்தார். இதையடுத்து, அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினரைக் கண்ட மர்ம கும்பல், தப்பியோடினர். பின்னர், போலீசுக்கு தகவல் அளித்த நிலையில், அவர்கள் விரைந்து வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாலதியை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்த லோகநாதனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் தேசியா என்ற ரவுடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அப்போது, அந்த வழக்கில் லோகநாதன் பெயரும் கிசுகிசுக்கப்பட்டது. தேசியாவின் உறவினர்கள் யாரேனும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு நபர்கள் யாரேனும் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.