For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்தியாவில் புல்லட் ரயிலுக்கான வழித்தடம் எப்படி இருக்கும்? புகைப்படம் வெளியீடு!

07:38 PM Mar 29, 2024 IST | Baskar
இந்தியாவில் புல்லட் ரயிலுக்கான வழித்தடம் எப்படி இருக்கும்  புகைப்படம் வெளியீடு
Advertisement

நாட்டிலேயே முதல் முறையாக மும்பை - அகமதாபாத் வரை புல்லட் ரயில் இயக்கப்பட இருக்கிறது. புல்லட் ரயிலுக்கான வழித்தடம் எப்படி இருக்கும் என்பதை காட்டும் வகையில் புகைப்படத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Advertisement

வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நமது நாட்டின் ரயில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் ரயில்வே நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், அதிவேகமாக பயணிக்கும் புல்லெட் ரயில் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. இந்தியாவில் புல்லெட் ரயிலுக்கான வழித்தடம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் 2026 முதல் புல்லட் ரயில் இயக்குவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை முதல் குஜராத்தின் அகமதாபாத் வரையிலான வழித்தடத்தில், 508 கி.மீ., தூரத்திற்கு முதல் புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது.

புல்லெட் ரயிலுக்காக வழக்கமான தண்டவாளத்தை போல் அல்லாமல் புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய தண்டவாளம் அமைக்கப்படுகிறது. அதாவது, "பேலஸ்ட்லெஸ் டிராக் சிஸ்டம்" என்ற புது வகையான ரயில் பாதை முதல்முறையாக உருவாக்கப்பட்டு உள்ளது. 295.5 கி.மீட்டர் தூரத்திற்கு பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணியும் 153 கி.மீட்டர் தொலைவுக்கு இருப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

'பேலஸ்ட்லெஸ் டிராக் சிஸ்டம்' என்ற புது வகையான தொழில் நுட்பத்துடன் ரயில்வே டிராக் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே இந்த வகை தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படும் முதல் டிராக் இதுவேயாகும். நாட்டிலேயே முதல் முறையாக புல்லெட் ரயில் இயக்கப்பட இருப்பதால், பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டில் இயக்கப்பட இருக்கும் முதல் புல்லெட் ரயில் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயில் மணிக்கு 320 கி. மீட்டர் வேகத்தில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புல்லெட் ரயில் திட்டத்திற்கு ரூ.1.08 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இந்த புல்லட் ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மத்திய அரசின் பங்களிப்பு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில அரசுகள் தலா 5 ஆயிரம் கோடி ரூபாயை வழங்குகின்றன. எஞ்சிய தொகை அனைத்தும் ஜப்பானிடம் இருந்து கடனாக பெறப்படுகிறது. இதற்கு 0.1 சதவீதம் மட்டும் வட்டி வசூலிக்கப்படவுள்ளது.

ஜப்பான் உதவியுடன் செயல்படுத்தப்படவுள்ள புல்லட் ரயில் திட்டம், இந்திய மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தொழில் துறை மிகுந்த இரண்டு முக்கிய நகரங்களை இணைக்கும் ரயில் பாதை என்பதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போது மும்பையில் இருந்து ரயிலில் அஹமதாபாத் செல்வதற்கு குறைந்தபட்சம் 5.30 மணி நேரத்தில் இருந்து அதிகபட்சமாக 9 மணி நேரம் வரை ஆகிறது.

புல்லட் ரயில் வெறும் 1.30 மணி நேரத்தில், மும்பையில் இருந்து அகமதாபாத் சென்றடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை - அகமதாபாத் இடையேயான தொலைவு 530 கிலோ மீட்டர் ஆகும். இந்த 2 நகரங்களுக்கு இடையே பயணிக்கவுள்ள புல்லட் ரயில் மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். பயணிகளின் பயண நேரம் கணிசமாக மிச்சம் அடையும். இதனால், பொது மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த புல்லட் ரயிலுக்கான வழித்தடம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புல்லட் ரயிலுக்கான தண்டாவளம் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் வகையில் மத்திய அரசு புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

வழக்கமான தண்டவாளத்தை போல் அல்லாமல் புல்லெட் ரயிலுக்காக புதிய தொழில் நுட்பத்துடன் "பேலஸ்ட்லெஸ் டிராக் சிஸ்டம்" என்ற புது வகையான ரயில் பாதையாக அமைக்கப்பட்டு வருகிறது. இதில், 153 கி.மீட்டர் தொலைவுக்கு இருப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், 295.5 கி.மீ தூரத்திற்கு பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.

Advertisement