’அழுகிப் போன மரங்கள் தான் உணவு’..!! கோடிகளில் விற்கப்படும் வண்டு..!! வியக்க வைக்கும் சுவாரஸ்ய தகவல்..!!
அழுகிப் போன மரங்களை சாப்பிட்டு 7 ஆண்டுகள் வரை உயிர் வாழும் மான் கொம்பு வண்டு பல லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமில்லை என்பதால், ஏராளமான விலங்குகள் மற்றும் பூச்சியினங்களும் வாழ்கின்றன. இதில், வண்டுகள் மற்றும் பூச்சிகளை நாம் பெரிதாக கண்டு கொள்வதில்லை. விவசாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் வண்டுகளை மட்டுமே தேடித்தேடி அழிக்கிறோம். பல வண்டுகள் இருந்தாலும், இந்த ஒரு வண்டு உலகிலேயே மிகவும் விலை உயர்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஆம்! இந்த ஒரு வண்டு ரூ.75 லட்சம் முதல் பல கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த வண்டை ஜப்பான் நாட்டு வளர்பாளர் இளநகை பணமதிப்பில் கிட்டத்தட்ட 3 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். இந்த விலை உயர்ந்த வண்டுக்கு ’Stag beetle’ என்று பெயர். லுகானிடே குடும்பத்தைச் சேர்ந்த வண்டுக்கு முன்பு இருக்கும் தாடைப் பகுதி பார்ப்பதற்கு மான் கொம்பு போன்று இருப்பதால், Stag beetle என்று அழைக்கப்படுகிறது. அதாவது தமிழில் மான்கொம்பு வண்டு என்று சொல்லப்படுகிறது. அழுகும் மரங்கள் அல்லது இறந்த மரங்களை மட்டுமே சாப்பிட்டு வாழும் இந்த வண்டுகளின் எடை 2-6 கிராம் வரை எடை இருக்கும்.
ஆண் வண்டுகளின் நீளம் 35-75 மி.மீ., பெண் வண்டுகளின் நீளம் 30-50 மி.மீ., இருக்கும் இந்த வண்டுகளின் ஆயுட்காலம் 3-7 ஆண்டுகள் என்று கூறப்படுகிறது. அரிய வகை நோய்களுக்கு மருந்து தயாரிப்பதற்காக இந்த வண்டுகள் பயன்படுகின்றன. இதுதான் பல லட்சம் ரூபாயில் தொடங்கி, பல கோடி ரூபாய் வரை இந்த வண்டுகள் விற்பனை செய்யப்பட காரணம். வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழும் இந்த வண்டுகள், குளிர் பிரதேசங்களில் இறந்து விடுகின்றன. இந்த வண்டுகள் இறந்த மரங்களை மட்டுமே சாப்பிடும் என்பதால், ஆரோக்கியமான மரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
Read More : பூமிக்கு மிக நெருக்கம்..!! அழிவு உறுதி..!! எச்சரிக்கும் இஸ்ரோ தலைவர் சோம்நாத்..!!