முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரொனால்டோவின் 19 ஆண்டுகால சாதனை முறியடிப்பு!. துருக்கி வீரர் மெஸ்ஸி அர்டா குலர் அசத்தல்!

Ronaldo's 19-year record breaking!. Turkish player Messi Arta Guler is amazing!
07:49 AM Jun 19, 2024 IST | Kokila
Advertisement

Arta Guler: கிறிஸ்டியானோ ரொனால்டோ 19 ஆண்டுகள் மற்றும் 128 நாட்களில் செய்த சாதனையை முறியடித்து துருக்கி வீரர் மெஸ்ஸி அர்டா குலர் அசத்தியுள்ளார்.

Advertisement

2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரின் செவ்வாய்(ஜூன் 18) அன்று நடைபெற்ற எஃப் பிரிவு போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் ஜார்ஜியாவை வீழ்த்தி துருக்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. போட்டியின் இரண்டாவது பாதியில் 65வது நிமிடம் துருக்கியின் அர்டா குலெர் ஒரு கோல் அடித்தார். இது யூரோ 2024 தகுதிச் சுற்று ஆட்டத்தில் கடந்த ஆண்டு வேல்ஸுக்கு எதிராக அவர் அடித்த கோல் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்தது. இந்த கோல் அடித்ததன் மூலம், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை அர்டா குலர் சாதனை முறியடித்துள்ளார்.

அதாவது, ஜார்ஜியாவுக்கு எதிராக ஒரு கோல் அடித்ததுடன் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் (19 ஆண்டுகள் மற்றும் 114 நாட்கள்) முதல் கோல் அடித்த இளைய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக, 2004 இல் கிறிஸ்டியானோ ரொனால்டோ 19 ஆண்டுகள் 128 நாட்கள் செய்த சாதனையை குலர் முறியடித்தார்.

Readmore: யூரோ 2024!. வரலாறு படைத்த துருக்கி!. 3-1 என்ற கோல் கணக்கில் ஜார்ஜியாவை வீழ்த்தி அபாரம்!

Tags :
19-year record breakingronaldoTurkish player Messi Arta Guler
Advertisement
Next Article