For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் ஷர்மா விலகல்?… வெளியான முக்கிய அறிவிப்பு!… ரசிகர்கள் அதிர்ச்சி!

07:41 AM Nov 23, 2023 IST | 1newsnationuser3
டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் ஷர்மா விலகல் … வெளியான முக்கிய அறிவிப்பு … ரசிகர்கள் அதிர்ச்சி
Advertisement

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து முழுமையாக ஒதுங்கி இருக்க ரோகித் ஷர்மா முடிவு செய்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement

2021 ஆம் ஆண்டு விராட் கோலி முதன்முதலாக இந்திய டி20 கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். அப்பொழுது உடனடியாக ரோஹித் சர்மா அடுத்த கேப்டனாக கொண்டுவரப்பட்டார். மேலும் டி20 வடிவத்தில் கேப்டனாக இல்லை என்றால் ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்திலும் கேப்டனாக இருக்க முடியாது என்று கூடி விராட் கோலி நீக்கப்பட்டார். வெள்ளைப் பந்தின் 2 வடிவத்திற்கும் ரோஹித் சர்மா கேப்டன் ஆனார்.

இதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் விராட் கோலி டெஸ்ட் தொடரை கேப்டனாக இழந்தார். இதற்கு அடுத்து உடனடியாக விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பொறுப்பையும் ராஜினாமா செய்தார். அந்த நேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மற்றும் பும்ரா இருவரது பெயரையும் கிரிக்கெட் வல்லுனர்கள் அடுத்த கேப்டனாக வலியுறுத்தினார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக மூன்று வடிவத்திற்கும் ஒரே கேப்டன் என ரோகித் சர்மாவையே கொண்டு வந்தது.

ரோகித் சர்மா தற்பொழுது மூன்று வடிவிலான உலகக் கோப்பை போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்து வருகிறார். நவம்பர் 2022 இல் இந்தியா டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் வெளியேறியதிலிருந்து ரோஹித் இரு நாடுகளுக்கு இடையிலான தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஹர்திக் பாண்டியா பெரும்பாலும் டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி வருகின்றார்.

36 வயதான இந்திய கேப்டன் 148 டி20 போட்டிகளில் விளையாடி நான்கு சதங்களுடன் கிட்டத்தட்ட 140 ஸ்ட்ரைக் ரேட்டில் 3853 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் உலகக் கோப்பையில் கவனம் செலுத்தியதால் கடந்த ஒரு வருடமாக டி20 போட்டிகளில் ரோஹித் விளையாடவில்லை. இது தொடர்பாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கருடன் அவர் விரிவாக விவாதித்துள்ளார். இந்த முடிவு முழுக்க முழுக்க ரோஹித்தின் முடிவு என PTI இடம் பிசிசிஐ-யின் நெருங்கிய வட்டாரங்கள் கூறியுள்ளனர்.

ரோஹித்துக்குப் பிறகு, ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய நான்கு தொடக்க ஆட்டக்காரர்களை இந்தியா கொண்டுள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் ஐபிஎல் போன்ற மிகப்பெரிய லீக் போட்டிகளில் தனது திறமைகளை நிரூபித்துள்ளனர். இளம் வீரர்கள் தொடர்ந்து சொதப்பினால், தேர்வாளர்கள் அல்லது பிசிசிஐ ரோஹித்தின் தற்போதைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும்படி கேட்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்த கட்டத்தில், ரோஹித் தனது பணிச்சுமையை சரியாக நிர்வகித்து, தனது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் காயம் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய விரும்புகிறார் எனவும் பிசிசிஐ வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மூன்று வடிவங்கள் மற்றும் ஐபிஎல் விளையாடுவது சாத்தியமற்றது மற்றும் டிசம்பர் 2023 முதல் மார்ச் 2024 வரை ஏழு டெஸ்ட் போட்டிகள் விளையாடப்பட வேண்டிய அட்டவணையில் இருப்பதால், இந்திய கேப்டன் ரோஹித்தின் கவனம் பெரும்பாலும் சிவப்பு-பந்து கிரிக்கெட்டில் இருக்கும் எனலாம். 2025 இல் இந்தியாவை மற்றொரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வதற்கான சாத்தியுமாக வாய்ப்பு அவருக்கு இன்னும் உள்ளது. மேலும் அவர் 2019 இல் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து அவரின் கிரிக்கெட் முற்றிலும் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளது.

Tags :
Advertisement