ஓய்வை அறிவிக்கிறார் ரோகித் சர்மா..? ஐபிஎல் தொடரிலும் விளையாட மாட்டாரா..? பிசிசிஐ எடுத்த திடீர் முடிவு..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 முடிந்தவுடன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பிசிசிஐ-யிடம் ரோஹித் சர்மா பேசி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ரோகித் ஓய்வு அறிவிப்பார் என்றும், ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஸ்கோர் எடுக்க திணறினார். இதனால் கடைசி மற்றும் சிட்னி டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. ரோகித்துக்கு பதில் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்பட்டார். கோலிக்கு பிறகு கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா பல வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்றுத் தந்துள்ளார்.
கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ரோகித் சர்மா ஓய்வு அறிவிக்கும் பட்சத்தில் அது இந்தியாவுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். டி20 போட்டிகளில் இருந்து ஏற்கனவே ரோகித் சர்மா ஓய்வு அறிவித்துள்ளார். இதையடுத்து, பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளார். அதன்பிறகு, சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட உள்ளார்.
இதற்கிடையே, ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இடையே மோதல்கள் வெடித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் இந்திய அணியில் சில மாற்றங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கம்பீரின் வீரர்கள் தேர்வு ரோகித் சர்மாவுக்கு பிடிக்கவில்லையாம். ரோஹித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக சில இளம் வீரர்களை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்திருக்கிறதாம்.