For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரோகித் சர்மா - ரித்திகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது!. ரசிகர்கள் வாழ்த்து!

Rohit Sharma and Ritika have a baby boy! Greetings fans!
07:24 AM Nov 16, 2024 IST | Kokila
ரோகித் சர்மா   ரித்திகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது   ரசிகர்கள் வாழ்த்து
Advertisement

Rohit sharma: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா - ரித்திகா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Advertisement

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா அணி பங்கேற்கவுள்ளது. வரும் 22ஆம் தேதி இந்திய அணி பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. ஆனால் இதுவரை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கவில்லை.

இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், ரோஹித் சர்மா மும்பையிலேயே இருந்து வந்தார். இதற்கான காரணம் குறித்து ரசிகர்களுக்கு வெளிப்படையாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனிடையே ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா கர்ப்பமாக இருப்பதால், ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா செல்லவில்லை என்று கூறப்பட்டது.

கடந்த சில மாதங்களாகவே ரோஹித் சர்மாவுடன் அவரின் மனைவி ரித்திகா எந்த பயணத்தையும் மேற்கொள்ளவில்லை. அதேபோல் மும்பை டெஸ்ட் போட்டியை காண வந்த போது ரித்திகா கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தம்பதியினர் இருவரும் 2வது குழந்தையை வரவேற்க தயாராகி வந்தது தெரிய வந்தது. இதனால் ரோஹித் சர்மா விடுப்பில் இருக்க வேண்டும் என்று ரசிகர்களே ஆதரவாக இருந்து வந்தனர்.

இந்த நிலையில் மும்பையில் உள்ள மருத்துவமனையில் ரித்திகாவிற்கு ஆண் குழந்தை பிறந்திருப்பது தெரிய வந்துள்ளது. அப்போது மனைவி ரித்திகாவுடன் ரோஹித் சர்மா ஆதரவாக இருந்திருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 2015ஆம் ஆண்டு திருமணம் முடிவடைந்த நிலையில், 2018ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

Readmore: மோதி பார்த்துடுவோமா?. ஜேக் பாலை கன்னத்தில் அறைந்த மைக் டைசன்!. 58 வயதில் மீண்டும் பாக்ஸிங்!. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!.

Tags :
Advertisement