சூப்பர்...! சாலை விபத்து... மருத்துவமனையில் சேர்த்தால் இனி ரூ.25,000 வழங்கப்படும்...! மத்திய அரசு அறிவிப்பு...!
சாலை விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பவருக்கான பரிசுத் தொகை ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாரத்மாலா பரியோஜனா போன்ற முன்னோடித் திட்டங்கள் மூலம் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு 60% வளர்ச்சியடைந்துள்ளது. 2014-ல் 91,287 கிமீ ஆக இருந்த நெடுஞ்சாலை தற்போது 146,195 கிமீ ஆக அதிகரித்துள்ளது. தேசிய அதிவேக வழித்தடங்கள் 2014-ல் 93 கிலோமீட்டராக இருந்தது தற்போது 2,474 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது.
மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிப்பதற்கான திட்டத்தை அரசு உருவாக்கி வருகிறது. பழைய வாகனங்களை உடைக்கும் திட்டத்தின் கீழ் (16.12.2024 நிலவரப்படி), 19 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 80 பதிவு செய்யப்பட்ட வாகனங்களை உடைக்கும் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. 66 கூடுதல் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலை விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பவருக்கான பரிசுத் தொகை ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, நடிகர் அனுபம் கேர் உடன் சாலை பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினார். அப்போது, பேசிய அமைச்சர்; சாலை விபத்தில் படுகாயமடைந்தவர்களை உடனடியாக (1 மணி நேரத்துக்குள்) மருத்துவமனையில் சேர்ப்பதன் மூலம் அவர்களுடைய உயிரை காப்பற்ற முடியும். இத்தகைய பணியை செய்பவர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது மிகவும் குறைவாக உள்ளதால், இந்தத் தொகையை 5 மடங்கு (ரூ.25,000) உயர்த்துமாறு சாலை போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார். சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பொதுமக்களை ஊக்குவிப்பதற்காக வெகுமதி வழங்கும் திட்டத்தை அக்டோபர் 2021-ல் மத்திய அரசு அறிமுகம் செய்தது.