For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா..? இந்த தவறை செய்தால் என்ன ஆகும் தெரியுமா..? உஷாரா இருங்க..!!

In this post let us know about the do's and don'ts when providing Aadhaar number.
05:20 AM Aug 07, 2024 IST | Chella
உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா    இந்த தவறை செய்தால் என்ன ஆகும் தெரியுமா    உஷாரா இருங்க
Advertisement

நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு ஆதார் என்பது முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. அரசு சேவைகள், வங்கி சம்பந்தப்பட்ட வேலைகள், தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் பல போன்றவற்றிற்கும் இந்த ஆதார் எண் பயன்படுகிறது. ஆதார் எண் ஒருவரது வங்கிக் கணக்கு, பான் கார்டு, மின்சார சேவை உள்ளிட்டவற்றுடன் இணைக்கப்பட்டிருப்பதால், இன்று ஆதாரை வைத்து பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகின்றன. எனவே, ஒருவர் ஆதார் நம்பரை வழங்கும்போது செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

Advertisement

செய்ய வேண்டியவை :

# உங்களது ஆதாரை கேட்கக்கூடிய நிறுவனமோ அல்லது தனி நபரோ அதற்கான சரியான காரணத்தையும், உங்களுடைய சம்மதத்தையும் பெற வேண்டியது அவசியம்.

# ஒருவேளை ஆதார் நம்பரை பகிர்வதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால், ஒரு வெர்ச்சுவல் ஐடென்டிஃபையரை (Virtual Identifier – VID) உருவாக்கிக் கொள்ளலாம். ஆதார் எண்ணுக்கு பதிலாக இந்த VID -ஐ நீங்கள் கொடுக்கலாம்.

# UIDAI வெப்சைட் அல்லது m-Aadhaar அப்ளிகேஷனில் கடந்த 6 மாதங்களுக்கான உங்களுடைய ஆதார் ஹிஸ்டிரியை தெரிந்து கொள்ளலாம்.

# ஒவ்வொரு ஆதன்டிகேஷன் செயல்முறையையும் UIDAI உங்களுக்கு இ-மெயில் மூலமாக தெரியப்படுத்தும். ஆகையால், அப்டேட் செய்யப்பட்ட இ-மெயில் ஐடியை உங்களது ஆதாருடன் இணைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

# ஆதார் ஆதன்டிகேஷனை பயன்படுத்தி பல்வேறு விதமான சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். ஆகவே, உங்களது பயன்பாட்டில் உள்ள மொபைல் நம்பரையும் ஆதாருடன் தவறாமல் இணைத்து வைக்கவும்.

# ஆதார் லாக்கிங் மற்றும் பயோமெட்ரிக் லாக்கிங் போன்ற வசதியையும் UIDAI வழங்குகிறது. ஆதாரை பயன்படுத்தாத சமயத்தில் அதனை பூட்டி வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது உடனடியாக அதனை அன்லாக் செய்து கொள்ளலாம்.

# ஒருவேளை உங்களது ஆதார் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாக தோன்றினால், உடனடியாக 1947 என்ற ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். இது 24*7 மணி நேர இலவச அழைப்பு. அல்லது help@uidai.gov.in என்ற இ-மெயில் ஐடியை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

செய்யக்கூடாதவை :

# உங்களுடைய ஆதார் லெட்டர் / PVC கார்டு அல்லது அதன் நகலை தவறுதலாக எங்கும் வைத்து விட வேண்டாம்.

# பொது தளங்களில் உங்களது ஆதார் எண்ணை ஷேர் செய்ய வேண்டாம். குறிப்பாக ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாக்களில் பகிரவே கூடாது.

# அதிகாரப்பூர்வமற்ற எந்த ஒரு நிறுவனத்திடமும் உங்களது ஆதார் ஓடிபி பகிர்ந்து கொள்ளக் கூடாது.

# உங்களுடைய m-Aadhaar PIN -ஐ யாரிடமும் சொல்லக்கூடாது.

Read More : ”பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி நான் தொகுத்து வழங்க மாட்டேன்”..!! அதிரடியாக அறிவித்த கமல்ஹாசன்..!!Read More :

Tags :
Advertisement