கர்ப்பிணிகள் டூ வீலரில் பயணம் செய்தால், கரு கலையும் அபாயம் அதிகம் உள்ளதா? கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..
தற்போது உள்ள காலகட்டத்தில், குழந்தை உருவாவது சவாலான ஒன்றாக மாறிவிட்டது. சரியான உணவு பழக்கம், மற்றும் தூக்கம் இல்லாததால் பலருக்கு குழந்தை பாக்கியம் இருப்பது இல்லை. இதனால் தான் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பெருகி வருகிறது. அந்த வகையில், பல போராட்டங்களுக்கு பிறகு உருவாகும் குழந்தையை எந்த பிரச்சனையும் இல்லாமல் பெற்றெடுக்கும் முன், பல சந்தேகங்கள் எழுவது உண்டு. அந்த வகையில், பல பெண்களுக்கு ஏற்படும் சந்தேகம் என்றால் அது கர்ப்பகாலத்தில் இருசக்கர வாகனத்தில் பயன் செய்யலாமா என்பது தான். பலர் இருசக்கர வாகனத்தில் சென்றால் கரு கலைந்து விடும் என்று பயப்படுவது உண்டு.
ஆனால் உண்மை என்னவென்றால், டூ வீலரில் போவதாலோ, ஆட்டோவில் பயணிப்பதாலோ, மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதாலோ கருவானது கலைந்துவிடாது. ஆனால், எது செய்தாலும் பொறுமையாக செய்ய வேண்டும். அதே சமையம் எங்கு சென்றாலும் பாதுகாப்பாக செல்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, 20 பெண்களில் ஒருவருக்கு கரு கலையும் அபாயம் இருப்பதாக தெரியவந்துள்ளது. 7வது வாரத்தில் செய்யப்படும் ஸ்கேனில் தான் கரு ஆரோக்கியமாக இருக்கிறதா, இல்லையா என்பதை சொல்ல முடியும்.
கர்ப்ப காலத்தில் லேசான ப்ளீடிங் இருந்தால் பயப்படத் தேவையில்லை. அது இயல்பான ஒன்று தான். ஆனால் இரத்த போக்கு அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், முதல் மூன்று மாதங்களில் தான் கரு கலைய அதிக வாய்ப்பு உள்ளது. கர்ப்பத்தில் சிக்கல் இருந்து, மருத்துவர் ஓய்வெடுக்கச் சொல்லாதவரை கர்ப்பிணிகள் தங்களின் வழக்கமான வேலைகளை செய்யலாம்.
Read more: சின்ன வெங்காயம் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா?? கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..