For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிக வாகன சத்தத்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்...!

07:01 AM Apr 30, 2024 IST | Vignesh
அதிக வாகன சத்தத்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்    ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Advertisement

வாகன சத்தத்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பெரும்பாலான மக்கள் கார் சத்தம் ஒரு எரிச்சலூட்டும் என்று கருதுகின்றனர். ஹார்ன் சத்தமாக இருந்தாலும், பிரேக்குகள் சத்தமாக இருந்தாலும், இன்ஜின் சத்தமாக இருந்தாலும், கார் போன்ற மற்ற வாகனங்கள் சத்தம் தொல்லை தருவதாக அமைந்துள்ளது. இதனால் குறிப்பாக நெரிசலான நகரம் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் கடுமையான பாதிக்கப்படுகின்றனர்.

Advertisement

மேலும், சமீபத்திய ஆய்வின்படி, வாகன சத்தம் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அவை மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. போக்குவரத்து சத்தத்தில் ஒவ்வொரு 10 டெசிபல் அதிகரிப்புக்கும், இதய நோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு ஆபத்து 3.2 சதவீதம் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

சத்தமில்லாத பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் அமைதியான சுற்றுப்புறங்களில் வசிப்பவர்களின் மாரடைப்பு விகிதத்தையும் ஆய்வு ஒப்பிட்டுப் பார்த்தது. "சத்தம் அதிகம் உள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு 100,000 மக்கள்தொகை உள்ள பகுதிகளில் 3,336 பேருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்று தெரியவந்துள்ளது. "அமைதியான சுற்றுப்புறங்களில் உள்ளவர்களுக்கு 100,000 பேருக்கு 1,938 மாரடைப்புகள் வருகின்றன.

Tags :
Advertisement