For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காஷ்மீரில் அதிகரிக்கும் பதற்றம்!… மர்மமான முறையில் 3 பேரின் உடல்கள் கண்டெடுப்பு!… இண்டர்நெட் தடை!… கூடுதல் வீரர்கள் குவிப்பு!

06:30 AM Dec 24, 2023 IST | 1newsnationuser3
காஷ்மீரில் அதிகரிக்கும் பதற்றம் … மர்மமான முறையில் 3 பேரின் உடல்கள் கண்டெடுப்பு … இண்டர்நெட் தடை … கூடுதல் வீரர்கள் குவிப்பு
Advertisement

காஷ்மீரில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்த நிலையில், பூஞ்ச் பகுதியின் குறிப்பிட்ட இடத்தில் உள்ளூர்வாசிகள் 3 பேரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​பகுதியில் கடந்த வியாழக்கிழமை 2 ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அங்கு பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டை தொடர்கிறது. இதற்கிடையே சந்தேகத்திற்கிடமான முறையில் 3 பேரின் உடல்கள் குறிப்பிட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் டோபா பீர் கிராமத்தில் வசிக்கும் சபிர் உசேன் (43), முகமது சவ்கத் (27), ஷபீர் அகமது (32) என்பது தெரிய வந்தது. அவர்களின் மரணத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. 3 உள்ளூர்வாசிகள் மர்மமான முறையில் இறந்ததால் காஷ்மீர் எல்லையில் உள்ள பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டது. உள்ளூர்வாசிகள் வன்முறையில் ஈடுபடுவதை தடுக்க அங்கு இன்டர்நெட் தடை செய்யப்பட்டது. பதற்றம் நீடிப்பதால் கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். உரிய விசாரணை நடத்த ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

பூஞ்ச் ​​மாவட்டத்தில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையின் போது இறந்த உள்ளூர்வாசிகள் 3 பேரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக காஷ்மீர் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையினரின் எக்ஸ் பதிவில், ‘பூஞ்ச் ​​மாவட்டத்தின் பாப்லியாஸில் 3 உள்ளூர்வாசிகள் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. மருத்துவ சோதனைக்குபிறகு இந்த விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இறந்த 3 பேரின் குடும்பத்திற்கும் அரசு இழப்பீடு அறிவித்துள்ளது. மேலும் இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் கருணை பணி நியமனம் வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement