RIP|சம்சாரம் அது மின்சாரம் ”கோதாவரி”!. பிரபல நடிகை கமலா காமேஷ் காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!
விசுவின் சம்சாரம் அது மின்சாரம் பட நடிகை கமலா காமேஷ் காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பன்முக திறமை கொண்ட விசுவின் படங்களுக்கு குடும்ப ஆடியன்ஸ் அனைவரும் அடிமை தான். பெண்களை போற்றும் விதமாக பல அற்புதமான படைப்புகளை கொடுத்த பெருமை இவருக்கு உண்டு. அப்படி அவர் இயக்கி நடித்த ஒரு படம் இன்றும் கூட டிவியில் போட்டால் நம்மை பரவசப்படுத்தும். அப்படிப்பட்ட படம் தான் சம்சாரம் அது மின்சாரம். அதில் விசு, கோதாவரி வீட்டுக்கு நடுவுல கோட போடு என்று சொல்லும் வசனமே வேற லெவலில் இருக்கும். இந்த கோதாவரி என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கமலா காமேஷ்.
தமிழ் சினிமாவில் 80-களில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்த கமலா காமேஷ், உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானர். அவருக்கு வயது 72. கடலோரக் கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை என சுமார் 480 படங்களில் அவர் நடித்துள்ளார். இயக்குனர் விசுவின் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் அவர் ஏற்று நடித்த, கோதாவரி எனும் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். ஜெயபாரதி இயக்கிய குடிசை படத்தின் மூலம் அறிமுகமான கமலா, அதன் பிறகு மேடை நாடகங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.
கடந்த 1974ம் ஆண்டு இசையமைப்பாளர் காமேஷை திருமணம் செய்து கொண்டார். அவர் 1984ம் ஆண்டு காலமானார். இந்த தம்பதிக்கு உமா ரியாஸ் என்ற மகள் இருக்கிறார். இவரும் கார்த்திக் நடிப்பில் வெளியான பிரியாணி உட்பட, பல திரைப்படங்களில் நடித்துள்ளார். உமாவின் கணவரான ரியாஸும் தமிழ் மற்றும் மலையாளம் என பல படங்களில் நடித்துள்ளார். வின்னர் படத்தில் இடம்பெற்ற கட்டதுரை கதாபாத்திரம் மூலம் ரியாஸ் மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
திரைப்படங்கள் மற்றும் மேடைநாடகங்கள் மட்டுமின்றி, சின்னத்திரையிலும் நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுக்கு தாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடைசியாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ”வீட்ல விசேஷம்” திரைப்படத்தில் அவர் நடித்து இருந்தார். கமலா காமேஷின் மறைவிற்கு திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலரும், நேரிலும் சமூக வலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Readmore: ஷாக்!. நீங்க குப்புறபடுத்து தூங்குகிறீர்களா?. சீக்கிரம் வயசாகிவிடுமாம்!. இத்தனை பக்க விளைவுகளா?.