For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

RIP | நடிகர் சேஷுவின் உடலுக்கு சந்தானம் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி..!!

08:07 AM Mar 27, 2024 IST | Chella
rip   நடிகர் சேஷுவின் உடலுக்கு சந்தானம் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி
Advertisement

’லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் சேஷூ உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (மார்ச் 26) காலமானார்.

Advertisement

லொள்ளு சபா நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரம் ஏற்றி நடித்து வந்த சேஷூ நேற்று காலமானார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கரணை இல்லத்தில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது. அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அப்போது அவருடைய இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று சேஷூ காலமானார். சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தின் கதாபாத்திரத்தில் நடித்து ரசிக்க வைத்திருந்தார். இவரின் காட்சிகளுக்கு திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மறைந்த நடிகர் சேஷுவின் உடலுக்கு நடிகர் சந்தானம், லொள்ளு சபா ஜீவா உள்ளிட்ட திரைத்துறையினர் கலங்கிய முகத்துடன் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை முதல் நடிகர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி செலுத்தினர்.

Read More : அசர வைக்கும் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் சொத்து மதிப்பு..!!

Advertisement