முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

RIP | பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்..!! திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்..!!

Legendary actress CIT Shakuntala passed away in Bengaluru due to ill health. He is 84 years old.
07:38 AM Sep 18, 2024 IST | Chella
Advertisement

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 84.

Advertisement

குரூப் டான்சராக மட்டுமின்றி, வில்லி நடிகையாக பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் சிஐடி சகுந்தலா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார். 1970ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான 'சிஐடி சங்கர்' படத்தில் அறிமுகமானதால், அப்படத்திற்கு பிறகு அனைவராலும் சிஐடி சகுந்தலா என்றே அழைக்கப்பட்டார்.

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தின் அரிசிபாளையத்தைச் சேர்ந்த இவர், சென்னையில் லலிதா, பத்மினி, ராகினி நடத்தி வந்த நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடினார். அப்போது கிடைத்த அறிமுகங்களின் அடிப்படையில் சினிமாவுக்குள் நுழைந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார், 'படிக்காத மேதை', 'கை கொடுத்த தெய்வம்', 'திருடன்', 'தவப்புதல்வன்', 'வசந்த மாளிகை', 'நீதி', 'பாரத விலாஸ்', 'ராஜராஜ சோழன்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர், சினிமாவில் இருந்து விலகிய பிறகு சீரியல்களில் நடித்து வந்தார். பிறகு வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்த அவர், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read More : இலவச மின்சாரம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..!! மக்களே இதை கவனிச்சீங்களா..?

Tags :
சினிமாதிரையுலகினர்பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா
Advertisement
Next Article