For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

RIP | பெரும் சோகம்..!! இயக்குனர் லிங்குசாமியின் அண்ணன் காலமானார்..!! அவரும் ஒரு நடிகரா..?

05:52 PM Feb 27, 2024 IST | 1newsnationuser6
rip   பெரும் சோகம்     இயக்குனர் லிங்குசாமியின் அண்ணன் காலமானார்     அவரும் ஒரு நடிகரா
Advertisement

இயக்குநர் லிங்குசாமியின் சகோதரர் கேசவன் (60) மாரடைப்பால் இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

’ஆனந்தம்’, ‘ரன்’, ‘சண்டக்கோழி’, ‘பையா’ போன்ற கமர்ஷியல் படங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் லிங்குசாமி. படங்கள் இயக்குவது மட்டுமல்லாது, ‘திருப்பதி பிரதர்ஸ்’ என்ற பெயரில் படங்களைத் தயாரிக்கவும் செய்கிறார். இவரது தயாரிப்பில் ‘வழக்கு எண் 18/9’, ‘உத்தமவில்லன்’ போன்ற படங்கள் வெளியானது. கும்பகோணத்தைச் சேர்ந்த லிங்குசாமி கூட்டுக் குடும்பத்தில் பிறந்தவர்.

இவருக்கு இரண்டு அண்ணன்களும் ஒரு தம்பியும் உண்டு. தன்னுடைய அண்ணன், தம்பி கதையை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் லிங்குசாமி இயக்கிய படம்தான் ‘ஆனந்தம்’. குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. லிங்குசாமியின் இரண்டாவது அண்ணன் கேசவன் இன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தை இவர் கவனித்து வந்தார். கேசவன் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இன்று மாலை அங்கு அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.

Read More : PM Modi | ’திமுகவால் அரசியலுக்கு இழுக்கு’..!! ’தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபடவில்லை’..!!

மறைந்த கேசவனின் மகன் வினோத், 'கோலி சோடா 2' படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார். மேலும், லிங்குசாமி தயாரிப்பில் வெளிவர இருக்கும் 'நான் தான் சிவா' என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Director Lingusamy's brother passed away

Advertisement