RIP| Essar குழுமத்தின் இணை நிறுவனர் ஷஷிகாந்த் ரூயா காலமானார்!.
RIP: Essar குழுமத்தின் இணை நிறுவனரும், இந்தியாவின் வணிகத் துறையில் முக்கிய நபருமான ஷஷிகாந்த் ரூயா வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 81.
1965-ம் ஆண்டு தனது தந்தை நந்த் கிஷோர் ரூயாவின் வழிகாட்டுதலின் கீழ் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கி பின் தனது சகோதரர் ரவியுடன் இணைந்து இந்த எஸ்ஸார் நிறுவனத்தை தொடங்கினார். மும்பையை தலைமையிடமாகக் கொண்ட எஸ்ஸார் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் அந்த நிறுவனத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
ஷாஷி ரூயா, பல தேசிய அமைப்புகள் மற்றும் தொழில் சங்கங்களில் தீவிரமாக ஈடுபட்டவர் ஆவார். மேலும், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) நிர்வாகக் குழுவிலும் பணியாற்றியுள்ளார். அதன் பின், இந்திய-அமெரிக்க கூட்டு வணிக கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றினார். பிறகு கப்பல், துறைமுகம், கட்டுமானம், மின்சாரம், எண்ணெய் உற்பத்தி, ஆற்றல், ஸ்டீல் என பல்வேறு துறைகளிலும் தங்கள் தொழிலை விரிவடையச் செய்தது. இந்நிறுவனம் வட மற்றும் தென் அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
எஸ்ஸார் நிறுவனத்தை தொடங்கிய ஆரம்ப நாட்களில் மிகவும் கடினமாக உழைத்த இவர், எஸ்சார் நிறுவனம் தொடங்கப்பட்டவுடன் மெட்ராஸ் போர்ட் டிரஸ்டிடம் இருந்து 2.5 கோடி மதிப்பிலான ஆர்டர் நிறுவனத்திற்கு கிடைத்தது. ஆரம்ப ஆண்டுகளில் எஸ்சார் நிறுவனம் கட்டுமானம், பொறியியல் போன்ற துறைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தது.
பாலங்கள் அமைப்பது, அணைகள் கட்டுவது, மின் உற்பத்தி நிலையங்கள் உட்பட பல முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை இந்நிறுவனம் கொண்டிருந்தது. 1980-களில் எண்ணற்ற எண்ணெய் மற்றும் எரிவாயு சொத்துகளை கையகப்படுத்தி எரிசக்தி துறையிலும் எஸ்சார் நிறுவனம் நுழைந்தது. இது இந்நிறுவனம் வளர்ச்சி அடைய பெரிதும் உதவியது.
இந்தநிலையில், திங்கட் கிழமையன்று வயது முதிர்வு காரணமாக ஷஷிகாந்த் ரூயா காலமானார். அவரது உடல் நேற்று செவ்வாய் அன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதன்பின் மாலை 4 மணி அளவில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
Readmore: புயல் எச்சரிக்கை… இன்று எந்தெந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுமுறை…? முழு விவரம்