காய்கறிகளை இப்படி சாப்பிடுவதால், எந்த பயனும் இல்லை.. மருத்துவர் சிவராமன் அளித்த விளக்கம்..
தற்போது உள்ள காலகட்டத்தில், பலர் அதிக விலை கொடுத்து வெளிநாட்டு உணவான சீஸ் வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால், அதில் கிடைக்கும் நன்மைகள் அனைத்தும் நமது பாரம்பரிய உணவான தயிர்பச்சடியில் உள்ளதாக மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். தயிர் பச்சடியில் இருக்கும் தயிர், அதில் இருக்கும் உப்பு, மேலும் வெங்காயம் என அனைத்துமே உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.
முடிந்த வரை, காலை உணவினை 6:45 முதல் 7:30க்குள் எடுத்துக் கொள்வது தான் நல்லது. அதே போல், மதியம் 1 மணிக்குள் மதிய உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு உணவு என்பது 6:30 மணி முதல் 7:00 மணிக்குள் தான் கட்டாயம் இருக்க வேண்டும். சர்வ சாதரணமாக பயன்படுத்தப்படும், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், மைதா, செயற்கை இனிப்பூட்டிகள், செயற்கை நிறமூட்டிகள் போன்ற பொருள்களை முற்றிலுமாக நாம் தவிர்க்க வேண்டும்.
அதே போல், நாம் காய்கறிகளை நன்கு கழுவிய பிறகு தான் சமைக்க வேண்டும். இல்லையென்றால் அதன் மேல் புறத்தில் இருக்கும் மருந்துகள் நம்மை பாதிக்கக் கூடும். எப்போதும் கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளை மட்டும் சாப்பிடாமல் பீர்க்கங்காய், சொரைக்காய் போன்ற நீர்ச்சத்து காய்கறிகளை செய்து சாப்பிட வேண்டும். புளியில் காய்கறிகளை ஊற வைத்தல் அல்லது அதோடு சேர்த்து வேக வைக்கும் போது தான் அதில் உள்ள சத்துக்கள் அப்படியே கிடைக்கும்.
இதனால் முடிந்த வரை காய்கறிகளை புளியில் வேக வைத்தோ, அல்லது ஊற வைத்தோ சாப்பிடுங்கள்.. இதனால் தான், நாம் பாரம்பரியமாக புளிக் குழம்பு, ரசம், சாம்பாரில் புளி கரைசல் ஊற்றி வேக வைத்து சாப்பிடுகிறோம்.
Read more: உங்க உணவு பழக்கத்தை இப்படி மாத்திப் பாருங்க, இனி மருத்துவமனை பக்கம் கூட போக மாட்டீங்க..