For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வணிக வரித்துறையில் நடப்பாண்டில் ரூ.79,772 கோடி வருவாய்...! அமைச்சர் மூர்த்தி தகவல்

Revenue of Rs.79,772 crore in the current year in commercial tax department
06:27 PM Nov 11, 2024 IST | Vignesh
வணிக வரித்துறையில் நடப்பாண்டில் ரூ 79 772 கோடி வருவாய்     அமைச்சர் மூர்த்தி தகவல்
Advertisement

வணிக வரித்துறையில் நடப்பாண்டில் இதுவரை 79,77 2 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஜிஎஸ்டி வரி வருவாய் விகிதத்தில் 19 .39% எட்டப்பட்டுள்ளது என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Advertisement

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் இன்று சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை அலுவலகக் கூட்டரங்கில் 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. வணிகவரித் துறையில் கடந்த 2023-2024 நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்கள் (அக்டோபர் மாதம் வரை) ரூ.70543 கோடி. நிகழும் 2024-2025 நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்கள் (அக்டோபர் மாதம் வரை) ரூ.79772 கோடி. கடந்த நிதி ஆண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் வரை கூடுதலாக ரூ.9229 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

மேலும் ஜிஎஸ்டி வரி வருவாய் வளர்ச்சி இந்திய அளவில் 11.59 சதவிகிதம் எனவும் தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வரி வருவாய் வளர்ச்சி 19.39 சதவிகிதம் எட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் இணை ஆணையர்கள் நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவுகளை பயன்படுத்தி வணிகவரித் துறையின் வருவாயை மேலும் கூட்டுவதற்கு உள்ள சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அவற்றினை செயல்பாட்டிற்கு கொண்டு வர ஆக்கபூர்வமாக செயலாற்றிட வேண்டுமென்றும் அறிவுறித்தினார்.

Tags :
Advertisement