கனமழை எச்சரிக்கை எதிரொலி...! 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம்...!
09:10 AM Nov 14, 2023 IST
|
1newsnationuser2
Advertisement
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை கடிதம் எழுதி உள்ளது.
கனமழையால் ஏற்படும் எந்த தேவையையும் சமாளிக்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாவட்ட நிர்வாகங்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவும், பேரிடர்களைக் கையாளுவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
மழை, வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்கக் கூடாது. வெள்ளபெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Article