பழிக்கு பழி..!! நடுரோட்டில் சட்ட கல்லூரி மாணவன் படுகொலை..!! நெல்லையில் பயங்கரம்..!! நடந்தது என்ன..?
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி கீழ நடுத்தெருவைச் சேர்ந்தவர் செல்லதுரை என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 22). இவர், சென்னையில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வயலுக்கு சென்றுவிட்டு பின்னர், மீண்டும் வீட்டிற்கு திரும்பினார்.
கமிட்டி நடுநிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, சேரன்மாதேவி லால் பகதூர் சாஸ்திரி தெருவைச் சேர்ந்த சிவராமன் என்பவரது மகன் மாயாண்டி (46), மணிகண்டனை வழிமறித்து, நடுரோட்டில் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை, அங்கிருந்தவர்கள் மீட்டு சேரன்மாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மணிகண்டன் உயிரிழந்தார். இதுகுறித்து சேரன்மாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில், பழிக்குப்பழியாக மணிகண்டன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோட்டராங்குளத்தில் சிவராமன் (25) என்ற வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் மணிகண்டனின் நெருங்கிய உறவினருக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மணிகண்டனை, கொலை செய்யப்பட்ட சிவராமனின் தாய்மாமா மாயாண்டி கத்தியால் குத்திக் கொன்றது தெரியவந்துள்ளது. இந்த பயங்கர சம்பவத்தால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தப்பியோடிய மாயாண்டியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Read More : தமிழ்நாட்டில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பா..? சென்னை வானிலை ஆய்வு மையம் வார்னிங்..!!