தலைமறைவானார் ரேவண்ணா மனைவி!… மாலைவரை வீட்டிலேயே காத்திருந்த அதிகாரிகள்!… அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
Revanna wife: பெண் கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கில் ரேவண்ணாவின் மனைவி பவானி தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக ஹாசன் தொகுதி மத சார்பற்ற ஜனதா தள எம்.பியும், இத்தேர்தலில் ஹாசன் தொகுதியின் பாஜ – மஜத கூட்டணி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பலாத்காரம் செய்து எடுத்த வீடியோக்கள் பரவி, தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே பிரஜ்வல் மட்டுமின்றி அவரது தந்தை ரேவண்ணா மீதும் முன்னாள் பணிப்பெண் ஹோலேநரசிப்புரா போலீசில் பாலியல் புகார் செய்தார்.
அதாவது, பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீஸ் விசாரணைக்கு அனுப்பாமல் கடத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு, 10 நாள் சிறைவாசத்துக்குப் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதேபோல் நேற்று பிரஜ்வால் ரேவண்ணா கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ரேவண்ணாவின் மனைவி பவானிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து விரைவில் அவரும் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.
அதன்படி, ஹொலெநரசிபுராவில் உள்ள ரேவண்ணாவின் வீட்டிற்கு நேற்று காலை 10 மணிக்கு சென்றனர். ஆனால் பவானி ரேவண்ணா வீட்டில் இல்லை. அவரது செல்போனுக்கு தொடர்புகொள்ள அதிகாரிகள் முயற்சித்தனர். செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், மாலை 5 மணி வரை அதிகாரிகள் வீட்டிலேயே காத்திருந்தனர். ஆனாலும் பவானி ரேவண்ணா செல்போனையும் அணைத்து வைத்துவிட்டு வீட்டிற்கும் வராததால் அதிகாரிகள் 5 மணி வரை காத்திருந்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினர். பவானி மீது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசித்துவருகின்றனர்.
Readmore: உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம்!… முதல் போட்டியில் அமெரிக்கா – கனடா மோதல்!