For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு 30 நாட்களுக்கு ஓய்வூதிய பலன்கள் - அதிரடி உத்தரவு

07:16 AM Apr 28, 2024 IST | Baskar
ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு 30 நாட்களுக்கு ஓய்வூதிய பலன்கள்   அதிரடி உத்தரவு
Advertisement

ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு 30 நாட்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, ஓராண்டு கடந்த பின்னரும் ஓய்வூதிய பலன்கள் பெற்று வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு தொடர் கோரிக்கைகள் அரசுக்கு விடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அரசு தரப்பில் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரின் பணிக்காலத்திற்கு, அகத்தணிக்கை மேற்கொள்ளப்பட்டு தணிக்கை அறிக்கை பெற்றிருக்கப்பட வேண்டும். இதன் பிறகு தனிப்பட்ட அரசு நிதி சார்ந்த தணிக்கைத் தடை நிலுவை ஏதுமில்லை என்ற நிலையில், ஓய்வு பெற்றவர்களுக்கு உடனடியாக 30 நாட்களுக்குள் ஓய்வூதிய பலன்களை வழங்கிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி சார்ந்த தணிக்கை தடைகளுக்காக, அவர்களின் ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்க கூடாது. தகுந்த நடைமுறைகளை உரிய ஆவணங்களுடன் உறுதிப்படுத்திய பின், தவறாமல் 30 நாட்களுக்குள் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். குறிப்பாக, நிதி சார்ந்த ஆசிரியரின் தணிக்கைத் தடை விபரம், சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாறுதலில் சென்றிருப்பின், தற்போது பணிபுரியும் பள்ளியில் பணிப்பதிவேட்டில் பதிவு மற்றும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதா என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

அதே போல் நிதி சார்ந்த தணிக்கைத் தடைக்கு உட்படுத்தப்பட்ட பணியாளர் நீதிமன்ற வழக்கு தொடுத்திருந்தால் அவை உறுதி செய்யப்பட வேண்டும். அகத்தணிக்கைத் தடை சார்ந்த இனங்களில் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஒய்வுபெற்ற அனைத்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கும் 30 நாட்களுக்குள் அனைத்து ஓய்வூதிய பலன்களும் பெற்று வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More: NCEL | 99,500 டன் வெங்காயத்தை 6 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி.!!

Advertisement