முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நாடு முழுவதும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு சில்லறை விலை...! மத்திய அரசு முக்கிய தகவல்...!

Retail prices of dal and urad dal across the country
07:30 AM Nov 28, 2024 IST | Vignesh
Advertisement

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பின் சில்லறை விலை குறைந்து, கடந்த 3 மாதங்களாக நிலையாக உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது

Advertisement

நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர்; துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் சில்லறை விலைகள் குறைந்து கடந்த 3 மாதங்களாக நிலையாக உள்ளது. நுகர்வோர் விவகாரங்கள் துறை, இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்துடன் வழக்கமான கூட்டங்களை நடத்தி வருகிறது. சில்லறை விற்பனையாளர்கள், நியாயமான விலையை பராமரிப்பதை உறுதி செய்வதற்காக பருப்பு வகைகளின் மண்டி விலை, சில்லறை விலை ஆகியவற்றின் போக்குகள் குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சில்லறை சந்தையில் நேரடியாக விற்பனை செய்யும் வகையில், பாரத் தால் பிராண்டின் கீழ் நுகர்வோருக்கு மலிவு விலையில் சில்லறை விற்பனைக்காக பருப்பு வகைகளின் இருப்பில் ஒரு பகுதியை அரசு தொகுப்பு இடையகத்திலிருந்து மாற்றியுள்ளது. இதேபோல், கோதுமை மாவு, அரிசி ஆகியவை பாரத் பிராண்டின் கீழ் சில்லறை நுகர்வோருக்கு மானிய விலையில் விநியோகிக்கப்படுகின்றன. நுகர்வோருக்கு வெங்காயம் கிலோ ரூ.35-க்கு விநியோகிக்கப்படுகிறது. இந்நடவடிக்கைகள் பருப்பு வகைகள், அரிசி, கோதுமை கோதுமை மாவு, வெங்காயம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கவும், விலையை நிலைப்படுத்தவும் உதவியுள்ளன.

காரீப் பயிர்களின் உற்பத்தி நல்ல நிலையில் உள்ளது. பாசிப்பயறு, உளுந்து போன்ற குறுகிய கால பயிர்களின் அறுவடை முடிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் துவரை பயிர் அறுவடை இப்போது தொடங்கியுள்ளது. இவை பருப்பு வகைகளின் விலையை மேலும் நிலைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
central govtDal priceurad dal
Advertisement
Next Article