அயோத்தி ராமர் கோவில் அருகே 'KFC'.? "கொஞ்சம் தள்ளி, சைவ கடையா போடுப்பா."! அதிகாரிகள் உத்தரவு.!
அயோத்திலுள்ள ராமர் கோவிலை சுற்றி 15 கிலோமீட்டருக்கு மது மற்றும் அசைவம் விற்பதற்கு தடை விதித்துள்ளது அயோத்திய நிர்வாகம். கேஎஃப்சி, அயோத்தியில் விற்பனை நிலையங்களை திறக்கலாம். எனினும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் அசைவ உணவுகளை விற்கக் கூடாது என்று அயோத்தி மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயிலை சுற்றியுள்ள 15 கிலோமீட்டர் 'பஞ்ச் கோசி மார்க்' எனப்படும் புனித பயணம் மேற்கொள்ளும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் மது மற்றும் மாமிசம் விற்பதற்கு, அயோத்தி நிர்வாகத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரிலும் இதே போன்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கத் துரித உணவு சங்கிலியான கேஎஃப்சி தங்களது விற்பனை நிலையங்களை அயோத்தியில் திறக்க அனுமதி உண்டு. ஆனால் தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டால், சைவ உணவுகளை மட்டுமே விற்க முடியும் என்று அயோத்தி மாவட்ட மாஜிஸ்திரேட் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
"தடை செய்யப்பட்ட மண்டலத்திற்கு வெளியே அசைவ உணவுகளை விற்பதற்கு கேஃப்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கேஃப்சி போன்ற அனைத்து பிராண்டுகளும், தங்களின் விற்பனை நிலையங்களை அயோத்தியில் திறக்க வரவேற்கப்படுகின்றனர். தடை விதிக்கப்பட்ட பகுதிக்கு வெளியே அசைவ உணவுகளை விற்பதற்கு அவர்களுக்கு எந்த தடையும் இல்லை", என்று டிஎம் குமார் கூறினார்.
கடந்த ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்த பிறகு, மக்கள் திரளாக அங்கு செல்கின்றனர். அவர்களுக்கு உணவளிக்க அயோத்தியை சுற்றி பல உணவகங்கள் திறக்கப்படுகின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.